ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், நேரு தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை (85). முதுமையிலும் இவர், அம்பத்தூர் ஏரியில் மீன் பிடித்து பிழைப்பு நடத்தி வந்தார். இவரது மனைவி ராஜம்மாள் (75) வீட்டு வேலைகளை செய்து வந்தார். அண்மைக்காலமாக தம்பதியினர் இருவருமே உடல்நலக்குறைவு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர். அவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை உறவினர்கள் அளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஏழுமலை வீட்டில் திடீரென காலமானார். இந்த செய்தியை மனைவி ராஜம்மாளுக்கு நீண்ட நேரத்திற்கு பிறகே உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் அத்தகவலை கேட்ட அவரும் படுத்த படுக்கையிலேயே கண்ணீர் மல்க உயிர் துறந்தார். இதனைக்கணட உறவினர்கள் கதறி அழுதனர்.