தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிகிச்சையை மறைத்து ஏன் திருமணம் செய்தாய்? கணவன் தகராறு: மனைவி தற்கொலை - கணவன் தகராறு

பல்லாவரம் அருகே இருதய அறுவை சிகிச்சையை மறைத்து ஏன் திருமணம் செய்தாய் என மனைவியிடம் கணவன் தகராறு செய்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் அப்பெண் தற்கொலையால் உயிரிழந்தார்.

மனைவி தற்கொலை
மனைவி தற்கொலை

By

Published : Jun 8, 2022, 8:35 PM IST

சென்னை:பல்லாவரம் அடுத்த திருசூலம் வைத்தியர் தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி (27). இவருடைய கணவர் ஜெபமணி. இவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. கணவர் ஜெபமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்துலட்சுமி திரிசூலத்தில் உள்ள தனது தந்தை ராமராஜனுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த முத்துலட்சுமி காணாமல் போனார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அப்பெண்ணின் தந்தை ராமராஜன் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அப்பெண் ஏசுமலை கல்குட்டை அருகே நடந்து சென்றது தெரியவந்தது. சந்தேகத்தின்பேரில், முத்துலட்சுமியை தாம்பரம் தீயணைப்பு துறையினர் கல்குட்டையில் தேடினர். அங்கு அவரது சடலம் இருந்தது. பின்னர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

தற்கொலை வேண்டாம்

காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் 11 வயதில் முத்துலட்சுமிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனை மறைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர் அவரது குடும்பத்தினர். திருமணத்திற்கு பிறகு இது தெரிந்த கணவர் ஜெபமணி அடிக்கடி மனைவி முத்துலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பெண் தனது தந்தையின் வீட்டில் வசித்து வந்துள்ளார். அங்கு மனஉளைச்சலில் இருந்த முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:மனைவியின் பிரிவை மறக்க இயலாத கணவர், மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சோகம்

ABOUT THE AUTHOR

...view details