சென்னை: நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பது குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கு 2018ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்துக்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தரப்பிலிருந்து, தமிழ்நாட்டில் மொத்த நிலப்பரப்பில் 6.92 விழுக்காடு சதுப்பு நிலங்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன் சதுப்பு நிலங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே, அதனை பாதுகாக்க முடியும். இன்றைய தேதிக்கு பள்ளிக்கரணை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கழுவேலி பகுதிகள் மட்டுமே சதுப்பு நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.