சென்னை:கடலூர் மாவட்டம், பிச்சாவரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சொதிக்குப்பம் கிராமத்தில், உப்பனாறு கரையில் 15 கிலோமீட்டர் தூரத்துக்கு மாங்குரோவ் காடுகளை, ஆலமரம் எனும் தொண்டு நிறுவனம் அமைத்தது.
தானே புயலிலும், 2015ஆம் ஆண்டு வெள்ளத்திலும் இந்த மாங்குரோவ் காடுகள் எனப்படும் அலையாத்தி காடுகள் அழிந்து விட்டதாகவும், அவற்றை மீண்டும் உருவாக்க உத்தரவிடக் கோரி, ஆலமரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவன செயலாளர் அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் மாங்குரோவ் காடுகள் சேதமடைந்துள்ளதாக நேரில் ஆய்வு செய்த மத்திய குழு அறிக்கை அளித்ததாகவும், அதன்படி, மீண்டும் இந்த காடுகளை உருவாக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியும் எந்த பணிகளும் நடைபெறவில்லை என்பதால், மீண்டும் அப்பகுதியில் மாங்குரோவ் காடுகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.