தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு அளித்தது ஏன்? ராமதாஸ் விளக்கம் - Why did support the Citizenship Bill? Explanation of Ramadoss

சென்னை: தேசிய குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக அளித்த வாக்கு ஈழ தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

Ramadoss
Ramadoss

By

Published : Dec 13, 2019, 1:32 PM IST

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஈழ தமிழர்களை அங்கீகரித்து அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை பாமக வலியுறுத்தியதாகவும், குடியுரிமைக்கு ஆதரவாக அளித்த வாக்கு ஈழ தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றும் கூறினார்.

அதுமட்டுமின்றி சட்டத்திருத்தம் கொண்டு வந்ததால், கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில் ஆதரவு அளித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே அனைத்தையும் தீர்மானம் செய்துவிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

Ramadoss

கூட்டணியில் இருப்பதால் அனைத்து மசோதாக்களையும் ஆதரிக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், கூட்டணியில் இருந்தால் ஆதரித்து தான் ஆகவேண்டும் என்று பதிலளித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details