இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜான்சிராணி, ”வெற்றி பெறும் தொகுதியான நிலக்கோட்டை தொகுதியை ஏன் தமிழக காங்கிரஸ் வாங்கவில்லை. வாய்ப்பிருந்தும் அத்தொகுதியை வாங்க மறுத்திருக்கின்றனர். இதனை குறிப்பிட்டு ராகுல் காந்திக்கு ட்விட்டர் மூலம் புகார் தெரிவித்துள்ளேன்.
நிலக்கோட்டையை காங்கிரஸ் கைவிட்டது ஏன்? - ஜான்சிராணி அதிருப்தி! - சென்னை செய்திகள்
சென்னை: வெற்றி பெறக்கூடிய வாய்ப்பிருந்தும் நிலக்கோட்டை தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டுப்பெறவில்லை என அக்கட்சியின் மகளிர் பிரிவின் முன்னாள் தலைவர் ஜான்சிராணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
jhonsy rani
அத்தொகுதியில் 2016 ஆம் ஆண்டு போட்டியிட எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருந்தாலும் கட்சிக்காக பணியாற்றினேன். தற்போதும் திமுக கூட்டணி கட்சியான மக்கள் விடுதலை கட்சிக்கு நிலக்கோட்டை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவிற்கு ஒதுக்கி இருந்தாலும் நன்றாக இருந்திருக்கும். என் கேள்வியே காங்கிரஸ் ஏன் அத்தொகுதியை கேட்டுப் பெறவில்லை என்பதுதான்” என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து களமிறங்கும் திமுக வேட்பாளர்
Last Updated : Mar 12, 2021, 7:40 PM IST