தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்குவர பல மாதம் ஆகும்' - தமிழ்நாட்டில் கரோனா தொற்று

கரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்குவர பல மாதம் ஆகும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

swamy swamynathan
swamy swamynathan

By

Published : Aug 16, 2020, 2:44 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு
கோவிட்-19க்கான சிறப்பு விருதை வழங்கினார்.

உலக சுகாதார நிறுவனத்தில் முதன்மை ஆராய்ச்சியாளராகவுள்ள மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், கரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளையும் பரிந்துரைகளையும் வழங்கிவருகிறார்.

அதைத்தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா சுவாமிநாதன், விருதுக்கு தன்னைத் தேர்ந்தெடுத்ததற்காக மாநில அரசுக்கு நன்றி தெரிவித்ததோடு, தொற்றுநோய் நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், "கரோனா நோய் தொற்றுக்கான தடுப்பு ஊசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, அதற்கான முயற்சியில் உலக நாடுகளும் இந்தியாவும் ஈடுபட்டு வருகிறது.

செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் சௌமியா சுவாமிநாதன்

முறையான மருத்துவ சோதனைகளுக்கு பின் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்குவர இன்னும் பல மாதஙகள் ஆகும். எனவே, ஆறு அடி தூர தகுந்த இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும். முகக்கவசங்கள் அணியாமல் பொதுமக்கள் வெளியே செல்லக் கூடாது" என்றார்.

இதையும் படிங்க: இருமடங்கு விலை உயர்ந்தும் உற்பத்தி செய்ய முடியாமல் தவிக்கும் உப்பளத் தொழிலாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details