சென்னை: கரோனா பெருந்தொற்று காரணமாக 2020-2021ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்துசெய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூன் 5ஆம் தேதி அறிவித்தார்.
மதிப்பெண் வழங்கும் முறை
மேலும், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்கான வழிகாட்டு குழுவையும் நியமித்தார். முதலமைச்சர் அறிவிப்பின்படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களுடைய சராசரி மதிப்பெண்ணில் 50 விழுக்காடு, 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் ஒவ்வொரு பாடத்திலும் எழுத்துத் தேர்விலிருந்து மட்டும் 20 விழுக்காடு, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு, அக மதிப்பீட்டிலிருந்து 30 விழுக்காடு என விகிதச்சாரா அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது.
மதிப்பெண் பட்டியல் தயார்
இந்நிலையில் அரசு தேர்வுத் துறை வெளிமாநிலங்கள், வேறு பாடத்திட்டங்களில் பத்தாம் வகுப்புப் படித்து தற்போது 12ஆம் வகுப்புத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண்களைப் பள்ளிகளிலிருந்து பெற்றது.