தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பத்து, பனிரெண்டாம் வகுப்புகளுக்கு வினாத்தாள் தொகுப்பு விற்பனை எப்போது? பள்ளிக் கல்வித்துறை தகவல் - school education statement

சென்னை: பத்து, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் தொகுப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் விற்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Question Papers
Question Papers

By

Published : Jan 23, 2020, 5:40 PM IST

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் தொகுப்பு தமிழ், ஆங்கில மொழிகளில் ஒரே தொகுதியாக 60 ரூபாய்க்கும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாட வரிசைக்கு வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வு புத்தகம் இணைந்து தமிழ், ஆங்கிலம் வழிக்கு தனித்தனியாக 80 ரூபாய்க்கும் கிடைக்கும். சென்னையில் பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக அலுவலகத்தில் விற்பனை கிடையாது.

12ஆம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவுக்கு தமிழ், ஆங்கில வழியில் ஒரே தொகுதியாக 60 ரூபாய் விலையில் (தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் அறிவியல்), கலை பாடப் பிரிவுக்கு தமிழ், ஆங்கில வழியில் ஒரே தொகுதியாக 80 ரூபாய் (தமிழ், ஆங்கிலம், வணிகவியல் கணக்குப் பதிவியல், பொருளியல், வணிக கணிதம், புள்ளியியல்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் கூறிய வினாத்தாள்களில் தொகுப்பு அச்சிடும் பணி நடைபெற்று வருவதால், பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கிடைக்கும்.

சென்னையில் அரும்பாக்கம் எம்எம்டிஏ அரசு மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரத்தில் டாக்டர் பி.எஸ். சீனிவாசா நகராட்சி மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூரில் ஆர்.எம். ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 37 மாவட்டங்களில் விற்பனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாமிரபரணி நீர் குடிப்பதற்கு உகந்ததா? தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details