இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "திமுக நடத்தும் ஆர்ப்பாட்டம், போராட்டத்துக்கு அனுமதி வழங்கும் அதிமுக அரசு, பாஜக வேல் யாத்திரை தொடங்கும் முன் கைது செய்யப்படுவது ஏன்?. இதில் அதிமுக - திமுக இடையே உள்ள புரிதல் என்ன?. முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட்டம் இல்லையா?. அதன் மூலம் கரோனா பரவாதா?" என்றார்.
அதிமுக - திமுக இடையே உள்ள புரிதல் என்ன? - கே.டி.ராகவன் கேள்வி - பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன்
சென்னை: அதிமுக - திமுக இடையே உள்ள புரிதல் என்ன? என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கே.டி.ராகவன்
தொடர்ந்து பேசுகையில், "டிசம்பர் 6ஆம் தேி வேல் யாத்திரை முடிவு பிரமாண்டமாக திருசெந்தூரில் நடைபெற உள்ளது. இதில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்பார். சம்பந்தம் இல்லாமல் பாஜகவினரை அதிமுக அரசு கைது செய்து வருகிறது. அதிமுகவுக்குள் உள் நோக்கம் உள்ளது" என்று தெரிவித்தார்.