தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒரு ரூபாய் அளவில் தமிழ்நாடு அரசு செய்யும் செலவுத்தொகை என்ன தெரியுமா? - ஒரு ரூபாய் அளவில் தமிழ்நாடு அரசு செலவிடப்படும் தொகை

தமிழ்நாடு அரசு செலவிடும் தொகை குறித்தான விவரத்தை, பைசா கணக்கில் வெளியிட்டுள்ளது.

Total Expenditure of Tamil Nadu Government
Total Expenditure of Tamil Nadu Government

By

Published : Mar 18, 2022, 8:49 PM IST

சென்னை:2022-23ஆம் நிதியாண்டின், நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மார்ச் 18) தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் செலவினங்களை தெளிவாக காட்டுவதற்காக, செலவினங்களின் அளவு விவரத்தை ஒரு ரூபாய் அளவில், அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டின் செலவு விவரங்கள்:

ஒரு ரூபாய் அளவில் தமிழ்நாடு அரசு செலவிடப்படும் தொகை என்ன?

ஒரு ரூபாயில் கடனை திருப்பிச் செலுத்தும் அளவு 7 பைசா, கடனுக்கான வட்டிச் செலவு 13 பைசா, கடன் வழங்குவதற்காக 2 பைசா, சம்பளம் வழங்குவதற்காக 20 பைசா, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பலன்களுக்காக 10 பைசா, செயல்பாடு மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்காக 4 பைசா, மானியங்களுக்காக 32 பைசா, மூலதனச் செலவுகளுக்காக 12 பைசா என ஒரு ரூபாயில் அரசு செலவிடும் தொகையின் அளவை பைசா கணக்கில் அரசு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றம் - தமிழ்நாடு பட்ஜெட் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details