தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக விவகாரத்தில் சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப்போகிறார்?

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி, ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்த விவகாரத்தில் சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

By

Published : Oct 12, 2022, 11:45 AM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அப்போது இருந்து அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி துணைத்தலைவராக பொறுப்பில் இருந்து வந்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஓ.பன்னீர்செல்வத்தினரை நீக்கி, ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமனம் செய்தனர். மேலும் எதிர்க்கட்சி சட்டப்பேரவை செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் தேர்வு செய்திருந்தனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் உள்ள எம்.எல்.ஏக்கள் அனைவரிடமும் கையெழுத்து பெற்று, சபாநாயகர் அப்பாவுக்கு அனுப்பி வைத்தனர்.

சபாநாயகர் அப்பாவு
இந்த நிலையில், சட்டப்பேரவையில் அதிமுக சார்ந்த நடவடிக்கைகளுக்கு தன்னிடம் ஆலோசிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுக்கு மீண்டும் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இதனை அறிந்த எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய தரப்பில் இருந்து, அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் ஆர்.பி. உதயகுமாருக்கு அனுமதி அளிக்க சட்டப்பேரவை செயலாளருக்கு கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வரும் அக்.17ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. இந்த இரு தரப்பினருடைய கடிதங்களைப் பெற்ற சபாநாயகர் இறுதி முடிவு எடுக்க உள்ளார்.

அதிமுக உட்கட்சி மற்றும் பொதுக்குழு விவகாரம் தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளதால், அதில் இறுதி முடிவு வரும் வரை ஏற்கெனவே இருந்த நிலை தொடரலாம் என சபாநாயகர் முடிவெடுக்க வாய்ப்புள்ளது. அப்படி முடிவெடுத்தால் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் அருகருகே அமர வேண்டிய சூழல் ஏற்படும். இப்படி முடிவு வரும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சட்டப்பேரவையை புறக்கணிக்க வாய்ப்புள்ளது. அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஜெயலலிதா சட்டப்பேரவையை புறக்கணிப்பார்.

அதே பாணியில் தங்கள் அணிக்கு சாதகமாக சபாநாயகர் முடிவு எடுக்காதபட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சட்டப்பேரவையை புறக்கணிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details