சென்னை:கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில்,தமிழ்நாட்டில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், இன்று (ஆகஸ்ட் 24) அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு.
- செப்டம்பர் 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால், ஒரு வாரத்திற்கு முன்பே கல்லூரி வளாகத்தை சுத்தப்படுத்திக்க வேண்டும்.
- கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.
- மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
- தடுப்பூசி செலுத்தாத பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர்.
- தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
- மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வர அவசியமில்லை.
- நோய்த்தொற்று உள்ள மாணவர்களைக் கண்டறிந்தால், அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.
- கல்லூரி நுழைவு வாயில்களில் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்து, பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்க வேண்டும்.
- கல்லூரி வளாகத்தில் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், டயர்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.