இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவில் இந்தியா்கள் பலா் வசித்து வருகின்றனர். கரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஊரடங்கிற்கு முன்னதாகவே மாலத்தீவு - இந்தியா இடையே விமான சேவைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் மாலத்தீவில் வசித்த இந்தியா்கள், சுற்றுலாப் பயணிகளாக சென்ற இந்தியா்கள் பலா் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்தியா திரும்ப முடியாமல், அங்கு சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனா். அவா்களில் பலா் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவர்.
அதன் பின்னர் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தியா்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய, மாநில அரசுகளுக்கு வைத்தன. இதனால் மாலத்தீவில் உள்ள இந்தியத் தூதரக அலுவலர்கள் மாலத்தீவு அரசிடம் பேசி அனுமதி பெற்றனா்.
போலி பாஸ்போர்ட்டில் இந்தியா வந்த வங்கதேசப் பயணி: தொடரும் விசாரணை - Fake passport
சென்னை: மாலத்தீவிலிருந்து மீட்கப்பட்டு வந்த இந்தியா்களுடன், போலி பாஸ்போா்ட்டில் வந்த வங்கதேசத்தைச் சோ்ந்தவரும் சென்னை விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டார்.
இதையடுத்து கடந்த வாரமே சென்னையிலிருந்து ஏா் இந்தியா சிறப்பு விமானம் சென்று இந்தியா்களை அழைத்துவருவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக, விமானம் மாலத்தீவு செல்லவில்லை.
இந்நிலையில் மாலத்தீவின் மாலே விமான நிலையத்திலிருந்து, ஏா் இந்தியா சிறப்புத் தனி விமானம் 82 இந்தியா்களுடன் நேற்று (ஜூன் 10) இரவு சென்னை வந்தது. அவா்களில் ஆண்கள் 66 பேர், பெண்கள் 13 பேர், சிறுவா்கள் 2 பேர், ஒரு பச்சிளங்குழந்தை என அனைவரையும் சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் வரவேற்றனா். பின்பு அவா்களை தகுந்த இடைவெளியில் வரிசைப்படுத்தி, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
அதன்பின்பு அவா்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவா்களில் 64 போ் தங்களால் கட்டணம் செலுத்தி தங்க வசதியில்லை என்றனா். அவா்களை அரசு ஏற்பாடு செய்த இலவச தங்கும் இடத்திற்கு மூன்று தனிப்பேருந்துகளில் அனுப்பிவைத்தனா். கட்டணம் செலுத்தியவா்கள் 17 போ் சென்னை நகரில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனா்.
இந்த விமானத்தில் வந்த ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரியைச் சோ்ந்த ஒரு பயணிக்கு பாஸ்போா்ட்டில் பிரச்னை ஏற்பட்டது. எனவே, அவரை குடியுரிமை அலுவலர்கள் வெளியே அனுப்பாமல் விசாரணை செய்தனர். அப்போது அவா் வங்க தேசத்தைச் சோ்ந்தவா் என்றும், போலி பாஸ்போா்ட்டில் இங்கு வந்துள்ளாா் என்றும் தெரிய வந்துள்ளது. தற்போது அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.