தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

50 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர் - Welfare assistance to unorganized workers given by TN cm Stalin

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 50 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று (ஜூலை.30) வழங்கினார்.

By

Published : Jul 30, 2021, 1:00 PM IST

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 50 ஆயிரம் அமைப்புசாரா தோழிலாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 10 கோடியே 69 லட்சத்து 86 ஆயிரத்து 950 ரூபாய்க்கான திருமணம், கல்வி, கண்கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், ஓய்வூதிய நிலுவைத்தொகையாக 24 கோடியே ஒன்பது லட்சத்து இரண்டாயிரம் ரூபாயும் சேர்த்து, மொத்தம் 34 கோடியே 78 லட்சத்து 88 ஆயிரத்து 950 ரூபாய்க்கான உதவிகள் வழங்கப்பட்டது.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஸ்டாலின்

இந்த விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்.குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் கிர்லோஷ்குமார், தொழிலாளர் நலத் துறை அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:பெகாசஸ் வேவு பார்த்தது உண்மை- பிரான்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details