சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (நவ. 11) மாலை காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.
சென்னை அருகே இன்று மாலை 5.15 மணியளவில் தொடங்கி, இரவு 7.45 மணி அளவில் முழுவதுமாக கரையைக் கடந்தது என்றும்; கரையைக் கடந்தபோது 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு, வடமேற்குத் திசையில் நகர்ந்து நாளை (நவ. 12) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Chennai Rains - குட்டித்தீவு போல் காட்சியளிக்கும் தாம்பரம்