தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரண்டு நாளைக்கு தமிழ்நாட்டில் வறண்ட வானிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் - மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

By

Published : Dec 19, 2021, 2:08 PM IST

சென்னை: வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 19.12.2021 முதல் 20.12.2021 வரை உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

19.12.2011 முதல் 20.12.2021 : குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக

19.12.2021முதல் 20.12.2021: தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:உண்மையை மறைத்து மனுத் தாக்கல் செய்த கணவர் : ரூ.25 ஆயிரம் அபராதம்

ABOUT THE AUTHOR

...view details