தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வறண்ட வானிலை காணப்படும் - வானிலை ஆய்வு மையம் - சென்னை வானிலை நிலவரம்

அடுத்த நான்கு நாள்களுக்குத் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

By

Published : Dec 23, 2021, 3:07 PM IST

சென்னை:தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 23ஆம் தேதிமுதல் 26ஆம் தேதிவரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 27: கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வெப்பநிலை எச்சரிக்கை

டிசம்பர் 23 முதல் 24 வரை: கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும்.

சென்னை வானிலை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகவும், புறநகர்ப் பகுதிகளில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29, குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு - புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.

இதையும் படிங்க:மரக்கட்டையைக் கலைப்பொருளாக்கும் கலை வித்தகர்

ABOUT THE AUTHOR

...view details