தமிழ்நாடு முழுவதும் கத்திரி வெயில் வாட்டிவதைத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பலரும் மதிய நேரங்களில் வெளியில் தலை காட்டாமல் வீட்டிற்குள் அடைந்து உள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கோடைமழை பெய்து மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது.
வட மாவட்ட மக்களே உஷார்! எச்சரித்த வானிலை ஆய்வு மையம் - Chennai Metrological Research Centre
சென்னை:தமிழ்நாட்டில் வடபகுதியில் வெப்ப காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டின் வட பகுதிகளில் வெப்ப காற்று வீசும் எனவும், பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் நேரடி வெயிலை தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை-விடுத்துள்ளது.
Last Updated : May 10, 2019, 5:21 PM IST