சென்னை: லா நினாவால் தமிழ்நாட்டில் குளிர் அதிகமாக இருக்கும் எனத் தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் கூறியுள்ளார்.
நிவர் புயல் கரையை கடந்த பின்னர் தமிழ்நாட்டில், சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் குளிர் அதிகமாக உணரப்பட்டது.
இது ஒவ்வொரு புயல் கரையை கடந்த பின்னர் நடக்கும் இயல்பான ஒன்று என்று பார்த்தாலும், லா நினா என்னும் ஓர் தன்மையால் இந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனி அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்கள் தெரிவிக்கின்றது.
லா நினா (La Nina) என்பது ஸ்பானிஷ் மொழி வார்த்தை. லா நினா என்றால் சிறுமி என்று ஸ்பானிஷ் மொழியில் பொருள். லா நினா (La Nina ) - எலினோ (El Nino) இரண்டும் நேர் எதிரானவை. பசிபிக் கடல் பகுதிகளில் இருக்கும் எந்த லா நினாவின் தாக்கத்தாலும் உலகளவில் வானிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.