சென்னை ரிப்பன் மாளிகையில் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சார்பில் ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்’ என்ற பெயரில் நேற்று (டிச.10) கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு உரையாற்றினார். கருத்தரங்கில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், “பெண்களை அடிமையாக வைத்திருக்க நினைப்பவர்களால் தான் இந்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடத்தப்படுகிறது. இதை சீர்ப்படுத்த வேண்டியது நமது கடமை. பெண்களுக்கு எதிரான குற்றம் செய்தவர்களுக்கான தண்டனையை அதிகப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது.
தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர். மகப்பேறு நிதி உதவியை 18 ஆயிரம் ரூபாயாக தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது.