திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு குறித்து அண்ணா அறிவாலயத்தில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் திமுக தரப்பிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், வீரபாண்டியன், பழனிசாமி ஆகியோரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளோம்! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - கம்யூனிஸ்ட் கட்சி
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டிருப்பதாகவும், விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
அதில் 10 தொகுதிகள் கேட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம், திமுக தரப்பில் 5 முதல் 7 தொகுதிகள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், தொகுதி பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாகவும், தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதால், விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் சுப்பராயன் கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக வேட்பாளர் நேர்காணல்! - ஒரே கட்டமாக நாளை மறுநாள் நடக்கிறது!