தமிழ்நாடு

tamil nadu

'இதற்காக எல்லாம் தேர்தலைத் தள்ளிவைக்க உத்தரவிட முடியாது'

By

Published : Sep 29, 2021, 3:40 PM IST

வாக்காளர் பட்டியலில் தவறு நடந்துள்ளது என்பதற்காக உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்க உத்தரவிட முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

MHC order
MHC order

சென்னை: வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளைத் திருத்த நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா இச்சிபுத்தூர் கிராமத்தில் உள்ள எட்டாவது வார்டில் வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளைத் திருத்தி புது வாக்காளர் பட்டியல் வெளியிடும்வரை தேர்தலை நடத்தக் கூடாது' எனக் கூறி அந்த வார்டைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'எட்டாவது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மற்ற வார்டுகளில் உள்ள பெண்கள், இறந்தவர்கள் என 120 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதைத் திருத்தாமல் தேர்தல் நடத்தக் கூடாது' என உத்தரவிட வேண்டுமென மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 'வாக்காளர் பட்டியலில் பெயர்கள் தவறாகச் சேர்க்கப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காகத் தேர்தலைத் தள்ளிவைக்கும்படி உத்தரவிட முடியாது' எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

மேலும், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளைத் திருத்த நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இடங்களைப் பங்கிடுவதில் குழப்பம்

ABOUT THE AUTHOR

...view details