சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி கூட்டம் ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் இன்று (மார்ச்3) நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமாகா தலைவர் ஜி.கே வாசன், "அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நல்ல முடிவை எட்டும் என எதிர்பார்க்கிறோம்.
சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவே முயற்சி செய்கிறோம் - ஜி.கே வாசன் - சென்னை மாவட்டச்செய்திகள்
அதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் நல்ல முடிவை எட்டும்பட்சத்தில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவே விரும்புகிறோம் என்று ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளை வெல்லும் வகையில் தொகுதிப் பங்கீடு இலக்கை நிர்ணயிப்போம். எதிர்க்கட்சிகளின் பொய் வாக்குறுதிகளை அதிமுக அரசின் நிஜ வாக்குறுதி வெல்லும். அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்க நெருங்க எத்தனை புதிய அணி வந்தாலும், அதிமுக கூட்டணியே வெற்றி பெறும். சைக்கிள் சின்னம் கிடைக்கத் தொடர்ந்து போராடுவோம், எங்கள் சின்னத்தில் போட்டியிடவே விரும்புகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆறாம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணத்தை அறிவித்த ஸ்டாலின்!