சென்னை:நடப்பு கோடைப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயறு வகை பயிர்களில் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிறுதானியப் பயிர்களைப் பயிரிட்டுள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் எட்டு லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயறுவகை பயிர்கள் குறிப்பாக உளுந்து, பச்சைப்பயறு, துவரை, தட்டைப்பயறு போன்ற பயறுவகைகள் சாகுபடி செய்யப்பட்டுவருகின்றன.
பயிர்கள் சாகுபடி
காரீப் பருவத்தில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) சுமார் 30 விழுக்காடு, மீதமுள்ள 70 விழுக்காடு பயறுவகைப் பயிர்கள் ராபிப் பருவத்திலும் (அக்டோபர் முதல் மார்ச் வரை) சாகுபடி செய்யப்பட்டுவருகின்றன.
பயறு வகை பயிர்கள் குறுகிய காலத்தில் அதிக வருமானம் தருவதுடன், மண் வளத்தையும் பாதுகாக்கும் என்பதால், நடப்பாண்டில் சம்பா நெல் அறுவடைக்குப் பின்பு, பயறுவகைப் பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்வதற்குத் தமிழ்நாடு அரசு சீரிய முயற்சிகளை எடுத்துள்ளது. இதுவரை, 1.6 லட்சம் ஹெக்டேர் உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்யப்பட்டு வளர்ச்சிப்பருவத்தில் உள்ளது.
மஞ்சள் தேமல் நோய்
தற்போது, பயறு வகைப் பயிர்களில், மஞ்சள் தேமல் நோய் (Yellow Mosaic Virus) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களில் முதலில் இளம் இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிறப்புள்ளிகள் தோன்றி, பின்னர் இலை முழுவதும் திட்டுத் திட்டாக ஒழுங்கற்ற மஞ்சளும், பச்சையும் கலந்த பகுதிகளாக மாறும். சில சமயம், நோயுற்ற இலைகள் சிறுத்தும், சுருங்கியும் காணப்படும்.
நாளடைவில் மஞ்சள் நிறப்பகுதி அதிகமாகி, துளிர் இலைகள் முழுவதும் மஞ்சளாகிவிடும். நோயுற்றச் செடிகளில் குறைந்த எண்ணிக்கையில் காய் பிடிக்கும். சில சமயங்களில் காய்களும் விதைகளும் மஞ்சளாக மாறிவிடும். செடிகளின் இளம்பருவத்தில் நோய் தோன்றினால் செடிகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டு, பெருமளவு மகசூல் இழப்பு ஏற்படும்.
கட்டுப்படுத்தும் வழிகள்