தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பேச்சுவார்த்தையில் உடன்பாடு - தண்ணீர் லாரிகள் போராட்டம் வாபஸ் - போராட்டம் வாபஸ்

சென்னை: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

water lorry

By

Published : Aug 21, 2019, 9:19 PM IST

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதற்கான உரிமம் 90 நாட்களை நிரந்தரமாக வழங்கவேண்டும், லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்வதை கைவிட வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தொடங்கினர்.

இதையடுத்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ஹரிஹரன் தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தினர்.

தண்ணீர் லாரிகள் சங்க தலைவர் செய்தியாளர் சந்திப்பு

இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடந்த பேச்சுவார்த்தையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு தங்களது கோரிக்கை ஏற்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கும் அனுமதி பெறுவது தொடர்பாக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் கனிமவளத் துறை செயலாளர்கள் தலைமைச் செயலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களது காலவரையற்ற போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என அச்சங்கத்தின் தலைவர் நிஜ லிங்கம் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details