சென்னை: வீராணம் ஏரியிலிருந்து சென்னை மக்களின் தாகம் தணிக்க முதல் கட்டமாக 90 மில்லியன் லிட்டர் தண்ணீரை எடுக்க சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் முடிவெடுத்துள்ளது.
சென்னையின் குடிநீர் பஞ்சத்தை போக்குவதில் வீராணம் ஏரி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே சென்னையில் உள்ள மெட்ரோ எரிகளில் போதுமான நீர் இருப்பு இருந்தாலும், வீராணம் ஏரியின் நீரை சேமித்து வைத்துக்கொள்ள சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
"வழக்கமாக வீராணம் ஏரியிலிருந்து 180 மில்லியன் லிட்டர் தினந்தோறும் எடுக்கப்படும். மேலும், சென்னை குடிநீர் வாரியம் நீர் வரும் குழாயில் பழுது பார்க்கும் பணியை தொடங்கியிருக்கிறது. சென்னையில் உள்ள ஐந்து ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 7,955 மில்லியன் கியூபிக் அடி உள்ளது. இதனால் வீராணம் ஏரியிலிருந்து முதல்கட்டமாக 90 மில்லியன் லிட்டர் எடுக்க திட்டமிட்டுள்ளோம்" என சென்னை குடிநீர் வாரிய அலுவலர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் மாங்குரோவ் காடுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
இதேபோல உதவி செயற்பொறியாளரான அருணகிரி (வீராணம் ஏரி, பொதுப்பணி துறை) நம்மிடம் கூறுகையில் "வீராணம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் பொதுமக்கள் ஆடி 18 திருநாளை கொண்டாட ஏரிக்கு அதிகளவில் நீரை திறந்துவிட பொதுப்பணி உயர் அலுவலர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" எனக்கூறிய அவர் சென்னை குடிநீர் வாரியம் தண்ணீரை விரும்பியபோதெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்தார்.