தமிழகத்தில் வன வளங்களைப் பாதுகாக்க வனத்துறையில் ஆயிரத்து 119 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணி புரிந்து வருகின்றனர். வனப்பகுதிகளில் வன மரங்கள் திருட்டு, வேட்டையாடுதல், நக்சல் ஊடுருவலைத் தடுத்தல், வன வளத்தையும் வன உயிரினங்களையும் பாதுகாக்கும் பல்வேறு பணிகளில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வனத்துக்குள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் வனவிலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் 10 ஆயிரத்திலிருந்து 12,500 ரூபாய் ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் ஜூலை மாதம் அறிவிப்பை வெளியிட்டார்.