தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! - தமிழக அரசு அறிவிப்பு! - ரேஷன் கடை ஊழியர்கள்

சென்னை: ரேஷன் கடையில் பணிபுரியும் விற்பனையாளர்கள், கட்டுநர்கள் ஆகியோருக்கு ஊதியத்தை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கும் தொகுப்பு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

shop
shop

By

Published : Feb 23, 2021, 8:17 AM IST

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், ”விற்பனையாளர்களுக்கான காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதியம் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் புதிதாக நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு, பணியில் சேர்ந்த ஓராண்டு மட்டும் தொகுப்பூதியம் வழங்கப்படும். விற்பனையாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் தொகுப்பூதியமான ரூ.5,000 என்பதற்கு பதிலாக ரூ.6,250 ஆகவும், கட்டுநர்களுக்கு தற்போது வழங்கப்படும் தொகுப்பூதியமான ரூ..4250 என்பதிலிருந்து ரூ.5,500 ஆகவும் மாற்றியமைத்து வழங்கப்படும். ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு ரூ.8,600 லிருந்து ரூ.29,000, மற்றும் கட்டுநர்களுக்கு ரூ.7,800 லிருந்து ரூ.26,000 வழங்கப்படும்.

பணியில் ஓராண்டு முடித்தோருக்கு, தற்போதுள்ள அடிப்படை ஊதியத்துடன் 100% அகவிலைப்படியினை சேர்த்து வரும் கூடுதலுக்கு, 5% ஊதிய உயர்வு வழங்கி, புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும். புதிய அடிப்படை ஊதியத்தில் 14% அகவிலைப்படி வழங்கப்படும். ஆண்டு ஊதிய உயர்வு ஆண்டு ஊதிய உயர்வு அடிப்படை ஊதியத்தில் 2.5 சதவீததிலிருந்து 3 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். ஊதிய உயர்வின் மூலம் 23 ஆயிரத்து 793 பேர் பயன்பெறுவார்கள். 19 முதல் 24 சதவீதம் வரை கூடுதல் நிதிப்பயன் கிடைக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒவ்வொருவர் தலையிலும் ரூ.62,500 ரூபாய் கடன்!

ABOUT THE AUTHOR

...view details