தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? - Voters population reaches to six crore

சென்னை: தேர்தல் ஆணையத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள துணை வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆறு கோடியை தாண்டியுள்ளது.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு தேர்தல் ஆணையம்

By

Published : Dec 17, 2019, 8:37 PM IST

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் ஜூன் மாதம் ஆறாம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஆறாம் தேதி வரை பெறப்பட்டன.

அவற்றில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து ஏற்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள துணை வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் வெளியிட்டார்.

இந்நிலையில், துணை வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 257 ஆண்கள், 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118 பெண்கள், மூன்றாம் பாலினத்தனர் 5 ஆயிரத்து 924 பேர் என மொத்தமாக தமிழ்நாட்டில் 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து தற்போது வரை மட்டும் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 571 பேர் புதிய வாக்காளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details