தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிரி, அலெக்சா, கூகுள் போன்ற வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூலம் அரசு இ-சேவை! - ஓகே கூகுள்

அரசு இ-சேவை திட்டத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாகவும், தட்டச்சு செய்யத் தெரியாதவர்களும் இணைய வழியில் அரசு சேவைகளைப் பெறும் வகையிலும், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய வாய்ஸ் அசிஸ்டென்ட் எனப்படும் இயங்குதளங்களில் அமைக்கப்பட்டிருக்கும் ஒலி உதவியாளர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இ-சேவை மையம் முடிவு செய்துள்ளது.

voice assistant support for tn e governance
voice assistant support for tn e governance

By

Published : Oct 9, 2020, 7:52 PM IST

சென்னை :அரசு இ-சேவையில் சிரி, அலெக்சா போன்ற குரல் வழி இயங்குதள உதவியாளர் பயன்பாட்டை நிறுவத் திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு இ-சேவை முதன்மை செயல் அலுவலர் சந்தோஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு அரசின் சேவைகளை இணையதளம் வாயிலாக வழங்கும் நோக்கில் இ-சேவை ஆணையம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, அதன் மூலமாக அரசு இ-சேவை மையம், அம்மா கிராமம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அரசு இ-சேவை திட்டத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாகவும், தட்டச்சு செய்யத் தெரியாதவர்களும் இணைய வழியில் அரசு சேவைகளைப் பெறும் வகையிலும், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ’வாய்ஸ் அசிஸ்டென்ட்’ எனப்படும் இயங்குதளங்களில் அமைக்கப்பட்டிருக்கும் ஒலி உதவியாளர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இ-சேவை மையம் முடிவு செய்துள்ளது.

கரோனா காலத்திலும் சிறப்பாக செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

மத்திய அரசு சார்பில் நடைபெற்ற 'பொறுப்புமிக்க செயற்கை நுண்ணறிவின் மூலம் சமூக மேம்பாடு' எனும் கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு இ-சேவை ஆணையரக தலைமை செயல் அலுவலர் சந்தோஷ் மிஷ்ரா, குரல் வழியில் உதவும் தொழில்நுட்பம் மூலமாக இணைய சேவையைப் பெறும் வகையிலான தொழில்நுட்பத்தை வடிவமைக்க, புதிய தொழில் முனையும் நிறுவனங்களுக்கு (ஸ்டார்ட் அப்) அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய சந்தோஷ் மிஷ்ரா, "இந்த எண்ணம் தற்போது கருத்தளவிலேயே உள்ளது. படிப்பறிவில்லாத பலருக்கும் தட்டச்சு செய்து இணையத்தை பயன்படுத்தத் தெரியாது. அவர்கள், தமிழில், குரல் வழியில் இணைய சேவையைப் பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பம் கொண்டுவர முயற்சித்து வருகிறோம். இதன்மூலம் பயனாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே: அக். 16 முதல் 21 வரை சலுகை மழை!

மனித மொழி, அதன் பொருளை இயந்திரங்களுக்கு கற்றுக்கொடுக்கும் இயற்கையான முறையில், மொழி கற்ற தொழில்நுட்பத்தைப் (natural language processing) பயன்படுத்தி, இயந்திரங்களுக்கு தமிழ் மொழி பயிற்றுவித்து, அதன்மூலம் குரல் வழி சேவையை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

கரோனா பாதிப்புகள் தொடங்கியபோது இ-சேவைகள் பயன்படுத்துவது குறைந்தது. தற்போது சேவைகளின் பயன்பாடு, கரோனாவுக்கு முந்தையை நிலையைவிட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. முன்பு வாரத்துக்கு 50 ஆயிரம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 90 ஆயிரம் சான்றிதழ்கள் வரை வழங்கப்படுகின்றன" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details