சென்னை: போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'இந்த சமுதாயத்தில் கரோனாவுக்குப்பிறகு போதைப்பொருள் தமிழ்நாட்டில் மிகவும் ஆழமாக நுழைந்துள்ளது. அதுவும் படிக்கும் குழந்தைகள் மத்தியில் திவீரமடைந்து வருகிறது.
தென்மண்டல போலீஸ் பிரிவு ஐஜி அஸ்ரா கார்க் களத்தில் இறங்கி இது சம்பந்தமான நபர்களைக்கைது செய்துள்ளார். இவர் எனது நண்பர் என்று நினைக்கும்போது எனக்குப்பெருமையாக உள்ளது. நம்மூரில் மேலும் டாஸ்மாக் உள்ளது. வேறு வகையிலும் தடம் மாற அதிக வாய்ப்புள்ளது. ஆனால், போதைப்பொருள் படிக்கின்ற குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்கும். பெற்றோர்களின் நம்பிக்கையை வீணடிக்காதீர்கள்.