சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்தில் அதன் துணை தலைவர் கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட அரசு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி வீட்டு வாசலில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், 5 பேர் வரை சென்று சிலைகளை கரைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டும் அந்த தீர்ப்பு பொருந்தும்.
நீதிமன்ற தீர்ப்பின்படி கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழ்நாட்டில் 1.25 லட்சம் சிலைகள் வைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.
கடந்த 38 ஆண்டு காலமாக பொது விழாவாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.. சிலை வைப்பதற்கு காவல் துறையிடம் அனுமதி கேட்டது கிடையாது. ஒலிப்பெருக்கி வைப்பதற்கு மட்டுமே அனுமதி கேட்டுள்ளோம். அதனால் இந்த ஆண்டும் காவல் துறையிடம் அனுமதி கோர போவதில்லை.
இந்து வழிபாட்டுக்கு எதிரானவர்களை எதிர்ப்போம்