தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி! - Viluppuram infant set as fire and death, seeking CBI investigation

சென்னை: விழுப்புரம் மாணவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் காவல் துறையின் விசாரணை திருப்திகரமாக இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்ததால் சிபிஐ விசாரணை கேட்டு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

By

Published : May 18, 2020, 7:00 PM IST

சென்னை ஆவடியைச் சேர்ந்த சுமதி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், “விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரையில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ என்ற சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் இருவரும் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த சிறுமி ஜெயஸ்ரீ, இறப்பதற்கு முன்பு அளித்த மரண வாக்குமூலத்தில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், சிறுமதுரை கிளை செயலாளர் கலியபெருமாள் இருவரும் முன்விரோதம் காரணமாக தன்னை தீவைத்து எரித்ததாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள், ஆனால் அவர்கள் இருவரும் ஆளும்கட்சியான அதிமுகவை சேர்ந்தவர்களாக உள்ளனர். எனவே தமிழக காவல் துறை விசாரித்தால் இந்த வழக்கில் நியாயம் கிடைக்காது. எனவே இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசுக்கும் மனு அனுப்பியுள்ளதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல் துறை விசாரணை திருப்திகரமாக இருப்பதாக அவரது பெற்றோர்கள் தொலைபேசி வாயிலாக தன்னிடம் தெரிவித்ததாகவும், வழக்கை திரும்பப் பெறுவதாகவும் குறிப்பிட்டார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details