தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ரவுடி மணிகண்டனை தற்காப்புக்காக தான் சுட்டனர்' - என்கவுன்டர் குறித்து எஸ்.பி பேட்டி - criminal Manikandan encounter

சென்னை: ரவுடி மணிகண்டனை தற்காப்புக்காகவே காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

என்கவுண்டர் குறித்து எஸ்.பி பேட்டி

By

Published : Sep 25, 2019, 8:43 AM IST

ரவுடி மணிகண்டனைத் தற்காப்புக்காகவே காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் மீது எட்டு கொலை வழக்குகள் உள்பட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றார்.

மேலும், 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாபு என்பவர் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியான மணிகண்டனைக் கைது செய்ய ஆறு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது என்றும் ஜெயக்குமார் கூறினார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த மணிகண்டன், சென்னை கொரட்டூரில் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து உதவி ஆய்வாளர்கள் பிரபு, பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர் மணிகண்டன் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிவளைத்து நீதிமன்றத்திற்கு வரும்படி கூறியுள்ளனர்.

விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேட்டி

ஆனால் மணிகண்டன் கத்தியை எடுத்துக் காவல் உதவி ஆய்வாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறிய ஜெயக்குமார், இதனைத்தொடர்ந்து வேறு வழியில்லாமல் தற்காப்புக்காகவே உதவி ஆய்வாளர் பிரகாஷ், மணிகண்டனைத் துப்பாக்கியால் இரண்டுமுறை சுட்டதாகவும் தெரிவித்தார். மேலும், உதவி ஆய்வாளர் பிரபு லேசான காயத்துடன் சிகிச்சைபெற்று வருவதாகவும், பிரகாஷ் படுகாயத்துடன் சிகிச்சைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:

கொரட்டூரில் ரவுடி மணிகண்டன் என்கவுண்டர்!

ABOUT THE AUTHOR

...view details