சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா தலைமைச் செயலாளரை சந்தித்து மனு அளித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு குழப்பமான சூழ்நிலையில் இந்த ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Vikrama Raja said 'We ready for lockdown' வணிகர்களிடம் முககவசம் அணிவது, கிருமி நாசினி தெளிப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்திி இருந்தோம். இருந்த போதிலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என அறிவிப்புகள் வெளியாகின.
இந்த குழப்பமான சூழ்நிலையில் இருந்து வணிகர்களை மீட்க முடியவில்லை. எங்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசிற்கு நேரடியாக எடுத்துரைக்க இருக்கிறோம்.
அரசு முடிவு செய்து 15 நாள்கள் முழு ஊரடங்கு என்றால் கூட முழுமையாக கடைகளை அடைத்து ஒத்துழைப்பு தர நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வணிகர்களை விதி மீறல் என்ற பெயரில் அரசு அலுவலர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர் வணிகர்களை அலைகளிக்க வேண்டாம்" என்றார்.