கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் 23ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கடந்த திங்கட் கிழமை பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் திருச்சியைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து, இரண்டு நிமிடம் இரண்டு வினாடிகளில் இலக்கைக் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இதனையடுத்து கோமதி பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
தங்கம் வென்ற கோமதியைப் பாராட்டி விஜயகாந்த் ட்வீட்! - Gomathi Marimuthu
சென்னை: ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதியைப் பாராட்டி விஜயகாந்த ட்வீட் செய்துள்ளார்.
விஜயகாந்த டுவீட்
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோமதியைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில், 'தோஹா ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.