எழும்பூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரபு மற்றும் திரு.வி.க நகர் தொகுதி வேட்பாளர் சேகர் ஆகியோரை ஆதரித்து, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று இரண்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது புளியந்தோப்பு பகுதியில் தேமுதிக தொண்டர்கள் அவரை பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.
பிரச்சார வாகனத்தில் வந்த விஜயகாந்த், அதில் நின்றபடியே கூடியிருந்த கட்சியினரை பார்த்து கையசைத்தார். இதனால் கட்சித் தொண்டர்களும் உற்சாகமாயினர். ஆனால், விஜயகாந்த் எதுவும் பேசாமலேயே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.