தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இயற்கைக்கு பாதகமாக வரும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பிடு வரைவு 2020ஐ கைவிடுக: விஜயகாந்த் - சுற்றுச்சூழல் தாக்க வரைவு

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், மத்திய அரசு கொண்டுவரும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பிட்டை உடனே கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

விஜயகாந்த் ட்வீட்
விஜயகாந்த் ட்வீட்

By

Published : Jul 27, 2020, 8:07 PM IST

இந்தியாவில் பெருநிறுவனங்களும், தொழிற்சாலைகளும் தொழில் தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1886-இன் கீழ் அனுமதி பெற வேண்டும்.

அதன்படி, சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் கீழ், திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய வேண்டும்.

அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்கவோ, இல்லாதபட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும்.

இதனை மாற்றியமைத்து சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020-ஐ மத்திய அரசு உருவாக்கி உள்ளதாகவும், அது பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கந்த சஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்

இவ்வேளையில் இதுகுறித்து ட்விட் செய்துள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், “இயற்கை வளத்திற்கும், விவசாயத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை (EIA 2020 Draft-ஐ) மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.” எனப் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details