தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று(மார்ச் 18) தனது 53ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனிடையே தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது செய்தியை ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.
மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கேப்டன்... லேட்டஸ்ட் புகைப்படங்கள்... - vijayakanth health condition
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது மனைவி, மகன்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கேப்டன்
இத்துடன் தனது மனைவி, மகன்களுடன் சேர்ந்து எடுத்துகொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில்,இன்று எனது மனைவி பிரேமலதா விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை, எனது மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகப்பாண்டியனுடன் தெரிவித்த போது" எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'மாஸ்க் அணிந்து சமூக வலைத்தளங்களில் டிபியாக வையுங்கள்' - விஜயகாந்த்