தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘பேரவையில் இருந்து வெளிநடப்பு ஏன்?’ - விஜயதாரணி விளக்கம் - vijayadharani press meet before assembly

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக விவாதிக்கப் பேரவையில் அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாகக் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி விளக்கம் அளித்துள்ளார்.

By

Published : Feb 17, 2020, 4:08 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், வண்ணாரப்பேட்டை விவகாரம் உள்ளிட்ட சில முக்கியப் பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப இருந்தன.

ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, திமுக வெளிநடப்பு செய்தது. அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்தது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயதாரணி, “குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் நாங்கள் அளித்த தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இதுதொடர்பாக விவாதம் நடத்தப் பேரவையில் மறுப்புத் தெரிவித்த காரணத்தினால், காங்கிரஸ் சார்பில் நாங்களும் வெளிநடப்பு செய்து இருக்கிறோம். வண்ணாரப்பேட்டையில் காவல் துறையினரின் நெருக்கடி, மாநில அரசின் கண்டு கொள்ளாதத் தன்மைப் போன்றவைக் காரணமாக, தொடர்ந்து அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.

விஜயதாரணி செய்தியாளர் சந்திப்பு

இதுகுறித்து எந்தத் திருப்திக்கரமான பதிலும் பேரவையில் எங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் மிகவும் வருத்தமான ஒன்று” எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details