தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"எஸ்.பி.பி.யின் நலம் குறித்து விசாரித்தேன், மருத்துவ உதவிக்கு அரசு தயார்" அமைச்சர் விஜயபாஸ்கர்! - spb updates

சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நலம் குறித்து விசாரித்தேன், அவருக்கு மருத்துவ உதவி வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

vijayabaskar
vijayabaskar

By

Published : Aug 15, 2020, 9:25 AM IST

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் 5ஆம் தேதி கரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதையடுத்து அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், நேற்று (ஆக.14) இரவு அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுகுறித்து அவரது மகன் எஸ்.பி. சரண் "என் தந்தையின் உடல்நிலை மோசமாக இருந்தாலும், கவலைக்கிடமாக இல்லை. எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் குணமடைந்து திரும்புவார்" அவர் பற்றி வெளியாகும் தகவல்கள் பொய்யானது" மறுப்பு எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டரில் "பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நலம் குறித்து எஸ்.பி. சரணிடமும், மருத்துவமனையின் தலைவரிடமும் விசாரித்தேன். அவருக்கு மருந்துவ உதவிகள் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. அவர் விரைவாக குணமடைய விரும்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:’விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்’ - எஸ்.பி.பி குறித்து திரையுலக பிரபலங்கள் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details