சென்னை:விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜயின் உத்தரவின்படி 'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' எந்தக் கட்சியுடனும் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது.
எனவே, தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்டத் தலைவர்களும், அணித் தலைவர்களும், ஒன்றிய, நகர, பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பரப்புரை செய்து, நடிகர் விஜய், தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாகச் செய்த நற்பணிகளை மக்களிடத்தில் கொண்டுசேர்த்து நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.