தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உலக விண்வெளி வாரம்: 7 நாள் உரை நிகழ்வுகள் - மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க - அறிவியல் பலகை

உலக விண்வெளி வாரம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 முதல் 10ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விண்வெளியில் பெண்கள் என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

vigyan prasar science board, உலக விண்வெளி வாரம், 7 நாள் உரை நிகழ்வுகள், மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க, முக்கிய செய்திகள், அறிவியல் பலகை, Ariviyal Palagai
உலக விண்வெளி வாரம்

By

Published : Oct 3, 2021, 11:03 AM IST

சென்னை: இந்த ஒரு வார காலத்திற்கு மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின்கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார், அதன் தமிழ்ப் பிரிவான அறிவியல் பலகை மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் இணைந்து இணையம் வழியாக விண்வெளி துறை குறித்த பல்வேறு தலைப்புகளில் அறிவியலாளர்கள் தமிழில் உரையாற்ற ஏற்பாடுசெய்துள்ளது.

தினசரி மாலை 6 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தலைப்புகளில் இஸ்ரோ அறிவியலாளர்கள் உரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்வு ஜூம் செயலி வழியாகவும், அறிவியல் பலகையின் யூ-ட்யூப் சேனலின் நேரலையிலும் காணலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் இல்லை.

முதல் நாளான அக்டோபர் நான்காம் தேதி, இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, "சந்திராயன் சரித்திர சாதனை எதிர்காலமும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

விஞ்ஞான் பிரசார் இயக்குநர் நகுல் பராசர், தொடக்க உரையாற்றுகிறார். த.வி. வெங்கடேஸ்வரன், எஸ். சௌந்தரராஜ பெருமாள், பிஷப் ஹெர்பர் கல்லூரி முதல்வர் பால் தயாபரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

திருச்சிராப்பள்ளி அஸ்ட்ரோ கிளப் மற்றும் பல்வேறு கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கின்றன. ஜூம் செயலி வழியே இணைவதற்கான அடையாள எண் (867 8031 1101) கடவுச்சொல் (567091) ஆகியவை இங்குத் தரப்பட்டுள்ளன, இவற்றைப் பயன்படுத்தி இந்த நிகழ்ச்சியில் இணையலாம்.

உலக விண்வெளி வாரம்: 7 நாள் உரை நிகழ்வுகள்

மேலும் அறிவியல் பலகை (Ariviyal Palagai) என்ற யூ-ட்யூப் சேனலில் நேரலையில் காணலாம். இந்த உரை நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்குபெற்றுப் பயனடையுமாறு அறிவியல் பலகை வேண்டுகிறது.

தினசரி நிகழ்வு குறித்த விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  • அக்டோபர் 4 - மாலை 6 மணி

மயில்சாமி அண்ணாதுரை, முன்னாள் இயக்குநர், இஸ்ரோ,

தலைப்பு: சந்திரயான் சரித்திர சாதனையும் எதிர்காலமும்

  • அக்டோபர் 5 - மாலை 6 மணி

ராஜசேகர், இஸ்ரோ, திருவனந்தபுரம்

தலைப்பு: விண்வெளித் துறையில் பெண்கள்

  • அக்டோபர் 6 - மாலை 6 மணி

இளங்கோவன் (ஓய்வு) அறிவியலாளர், இஸ்ரோ, சென்னை

தலைப்பு: காகரின் முதல் ககன்யான் வரை

  • அக்டோபர் 7 - மாலை 6 மணி

வே. சசிக்குமார் அறிவியலாளர் இஸ்ரோ, திருவனந்தபுரம்,

தலைப்பு - உலக ஏவு வாகனங்கள்

  • அக்டோபர் 8 - மாலை 6 மணி

த.வி. வெங்கடேஸ்வரன், அறிவியலாளர், விஞ்ஞான் பிரச்சார், டெல்லி

தலைப்பு: இரண்டாவது தேனிலவு ஏன், எப்படி?

  • அக்டோபர் 9 - மாலை 6 மணி

பால் முருகன், அறிவியலாளர் இஸ்ரோ, திருவனந்தபுரம்

தலைப்பு: ராக்கெட் மீட்பு மறுபயன்பாடு

  • அக்டோபர் 10 - மாலை 6 மணி

பாலாபாரதி, தலைவர், திருச்சி ஆஸ்ட்ரோ கிளப், திருச்சி

தலைப்பு : இரவு வான்நோக்குதல்

ABOUT THE AUTHOR

...view details