சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியன் என்பவரது அலுவலகத்தில், அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், அங்கு மட்டும் 89 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர், அங்கேயும் நீண்ட நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில், ஒரு கோடியே 32 லட்ச ரூபாய் ரொக்கமும், மூன்று கிலோ தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்களும் பாண்டியன் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன. அதோடு 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள், ஒரு கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.