சென்னை:மாங்காடு, பத்மாவதி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நித்யா(37). இவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஒதுக்கப்பட்டுள்ள கார் பார்க்கிங் பகுதியில் வேறு ஒருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
அது குறித்து கேட்டபோது, கீழ்தளத்தில் வசிக்கும் மோகன் என்பவர் நிறுத்தும்படி சொன்னதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து நித்யா அதே குடியிருப்பில் கீழ்தளத்தில் வசிக்கும் மோகனிடம் நேற்று (ஜூன்56) கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மோகன் வீட்டில் இருந்த இரும்பு கதவை வேகமாக திறந்து கொண்டு வெளியே வரும்போது அவரது தாயின் முகத்தில் பட்டதில் லேசான காயம் ஏற்பட்டது.