பாண்டி பஜார் காவல் நிலையம் பின்புறம் உள்ள சாலையில், போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் சேகர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக தலைக்கவசம் அணியாமல், குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் ஒரு நபர் வந்துள்ளார்.
தலைக்கவசம் அணியாமலும் அளவுக்கு அதிகமாகக் குடிபோதையில் இருந்ததாலும் போக்குவரத்து காவலர்கள் அவரை சோதனை செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் உதவி ஆய்வாளர், காவலர் ஆகியோரை அடிக்க முயற்சிக்கும் காணொலிக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.