தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான நேர்காணல் தேதி அறிவிப்பு - சென்னை மாவட்ட செய்திகள்

கால்நடை பராமரிப்பு பணிக்கான கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கு தேர்வு எழுதியவர்களுக்கு நேர்காணல் தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Tamil Nadu Public Service Commission
Tamil Nadu Public Service Commission

By

Published : Dec 18, 2020, 10:16 PM IST

சென்னை: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிக்கான கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கு தேர்வு எழுதியவர்களில் 1,907 நபர்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2019-2020ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பதவிக்கான கால்நடை உதவி மருத்துவர் பதவியில் 1,141 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்ற தேர்வினை 2015 பேர் எழுதினர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறையின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் இடஒதுக்கீட்டு விதி, அந்த பதவிக்கான பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணலுக்கு தற்காலிகமாக 1,907 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான நேர்காணல், 2021 ஜனவரி 4, 5, 6, 8, 11, 12, 18, 19, 20, 21, 22, 23, 25, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மருத்துவ சிகிச்சை அடிப்படை உரிமை’ - உச்ச நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details