தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இந்தியா-பாகிஸ்தான் போரின் 50ஆவது ஆண்டு நினைவுநாள்: வீரர்கள் அஞ்சலி

சென்னை: வங்கதேசம் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற காரணமாக அமைந்த 1971 இந்தியா-பாகிஸ்தான் போரின் 50ஆவது ஆண்டு நினைவுநாள் நேற்று (டிச. 16) அனுசரிக்கப்பட்டது.

Indo-pak war
Indo-pak war

By

Published : Dec 17, 2020, 8:27 AM IST

வங்கதேசத்தில் அடக்குமுறைகளைக் கையாண்ட பாகிஸ்தானுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய ராணுவம் 1971ஆம் ஆண்டில் போரிட்டு வெற்றிபெற்றது. இந்திய ராணுவ வீரர்களின் திறமைகளையும், தியாகத்தையும் அந்நாளில் பல்வேறு தலைவர்களும் நினைவுகூர்ந்துவருகின்றனர். அதன் நினைவாக ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள நினைவிடத்தில் வீரர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இந்தியா-பாகிஸ்தான் போரின் 50ஆவது ஆண்டு நினைவுநாள்

இதையொட்டி சென்னையில் உள்ள போர் நினைவிடத்திலும் நேற்று (டிச. 16) வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தக்ஷின பாரத் (தெற்கு இந்திய) ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் பிரகாஷ் சந்திரா, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் முப்படைகளைச் சேர்ந்த அலுவலர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியா-பாகிஸ்தான் போரின் 50ஆவது ஆண்டு நினைவுநாள்

கரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க: இந்திய ராணுவ வெற்றி நாளின் 50ஆவது ஆண்டு கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details