தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரும் திமுகவின் பொதுச்செயலாளருமான க. அன்பழகன் இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானர். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. காலை முதலே திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
அவரது மறைவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு வெங்கையா நாயுடு தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார்.